2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைதிகளின் விடுதலை விவகாரம்: நழுவிச் சென்ற அமைச்சர்

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோளரவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு பதிலையும் வழங்காது அமைச்சர் தலதா அத்துக்கோரள நழுவிச்சென்றுள்ளார்.

ஒட்டுசுட்டான் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு தேவையான உதவி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்ந்துகொண்டு உரையாற்றியபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், அந்த நிகழ்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு கருத்துகளையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளர்கள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த அவர், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளேன். அங்கு ஒரு முடிவு எட்டுவதாக  பதிலளித்து விட்டு நழுவி சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .