2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கடற்றொழில்: 6 பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கடலில், அண்மை நாள்களாகத் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இரவு நேரங்களில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் திருகோணமலையைச் சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், வியாழக்கிழமை, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்,  மீனவர்கள் தங்கள் பிரச்சினையை எடுத்துரைத்தனர்.

இதன்போது, அவர் உடனடியாகக் கடற்படை தளபதிக்கு தொடர்பு கொண்டு, விடயத்தைத் தெரியப்படுத்தியதுடன், அன்றிரவு மீனவர்களின் உதவியுடன் கடலில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட கடற்படையினர், இரண்டு படகுகளை பறிமுதல் செய்ததுடன், 6 மீனவர்களைக் கைதுசெய்துள்ளார்கள்.

புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த பெருமளவான மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு நிலையில், கடற்படையினரைக் கண்டதும் தப்பியோடியுள்ளார்கள்.

இவ்வாறான நடவடிக்கையைக் கட்டுப்படுத்த கடற்படையினர் தொடர் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென, முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .