2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சட்டவிரோத மறிப்பால் கால்நடைகளுக்கு நீர் இல்லை

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழுள்ள கழிவுவாய்க்கால்கள், ஆறுகள் சட்டவிரோதமான முறையில் மறிக்கப்பட்டுள்ளதால், தட்டுவன்கொட்டி, உமையாள்புரம், கோரக்கன்கட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளத்தின் கீழுள்ள கனகராயன்ஆறு, உப்பாறுகோரக்கன்கட்டு ஆறு, பரந்தன் இராசாயன ஆறு ஆகியன மறிக்கப்பட்டு, அவற்றின் மூலம் செல்கின்ற கழிவு நீரை விவசாயச் செய்கைக்குப் பயன்படுத்துவதால், இதன் கீழ் பகுதிகளான கோரக்கன்கட்டு, கண்டாவளை, தட்டுவன்கொட்டி, உமையாள்புரம், நாவல்கொட்டியான், காஞ்சிபுரம், செருக்கன் போன்ற பகுதிகளுக்கான கழிவு நீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற கால்நடைகள், காட்டு விலங்குகள் கு​டிநீர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன.

இந்தச் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவைகள் நிலையம், பிரதேச செயலகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .