2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சந்தேகக் கண் வேண்டாம்’

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஒரு சிலர் செய்த தீவிரவாத நடவடிக்கையால், ஒட்டுமொத்த முஸ்ஸிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறெனத் தெரிவித்த மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ், தாங்கள் நீண்ட காலம் முஸ்ஸிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

மன்னாரில் உள்ள தனியார் ஹோட்டலொன்றில், இன்று (14) நடைபெற்ற சமயம், சகவாழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தீவிரவாதக் கொள்கையுடைய குறிப்பிட்ட சிலரின் செயற்பாட்டால் இன்று பிளவுகள் ஆரம்பித்துள்ளதாகவும் இந்தத் தீவிரவாதச் செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தவறினாலும், இறைவனின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

சட்டத்தை மீறி செயற்படுகின்றவர்கள் மாத்திரமே கைதுசெய்யப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், சாதாரண, அப்பாவி பொதுமக்களை கைது செய்தல், நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில், ஒற்றுமையையும் சமாதானத்தையும் சீர்குழைக்கின்ற செயற்றிட்டங்களை யாராவது முன்னெடுத்தால், அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் மிகக் கடுமையானதாகவே இருக்குமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X