2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சமூக சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சமூக சேவைகள், மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் சமூக சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை நடைபெற உள்ளது.

போரால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களின் நலன் கருதி வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில், அந்தந்த மாவட்ட செயலகத்துடன் இணைந்து சமூக சேவைகள் தொடர்பான மாபெரும் நடமாடும் சேவை நடைபெற உள்ளது.

நாளை சனிக்கிழமை (24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் சமூக வலுவூட்டல், கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நடமாடும் சேவையில், மூக்கு கண்ணாடி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு திருத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல், பூர்த்தி செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடத்துக்கான காசோலை வழங்கல், பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளியாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி, முதியோர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு போன்றவை வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .