2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சம்பந்தனின் வாக்குறுதி பொய்த்துவிட்டது’

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'படையினர் வசம் இருக்கின்ற காணிகளில் ஒரு பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் ஏனைய 70 ஏக்கர் காணி, தவணை அடிப்படையில் விடுவிக்கப்படும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த மாதம் நேரடியாக இவ்விடத்துக்கு வந்துக் கூறினார். ஆனால், இதுவரையில் அதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை' என்று, இன்று (26) 118ஆவது நாளாகத் தமது போராட்டத்தைத் தொடர்ந்துவரும் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

'எந்தவோர் அரசியல்வாதியாலும் அதிகாரியினாலும் திரும்பிப் பார்க்கப்படாத நிலையில், எங்களது போராட்டம் தொடர்கின்றது. எங்களின் நிலங்களுக்காக 118 நாட்களுக்கு மேலாக நாங்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றோம்' என்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேப்பாப்புலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், எவ்விதத் தீர்வுகளுமின்றிய நிலையில், தொடர்கிறது.

இது குறித்து தொடர்ந்துரைத்த போராட்டக்காரர்கள், '118 நாட்களாக, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில், இங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், காணிகள் விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியளித்துச் சென்ற போதிலும், இன்று வரை எந்தவொரு தீர்வுகளும் இன்றிய நிலையில், போராட்டம் தொடர்கிறது' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .