2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சம்பந்தமில்லாத குடியேற்றம் வேண்டாம்’

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினூடாக, பொதுமக்களுக்கான நீரை வழங்குங்களென வலியுறுத்திய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், பிரதேசத்துக்குச் சம்பந்தமில்லாத மக்களை வரவழைத்துக் குடியேற்றுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரினார்.

மேலும், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் அமைச்சராக பிரதமர் இருந்தபோது, வடக்குக்கு மகாவலி நீரைக் கொண்டுவருதாகக் கூறினார். ஆனால், இன்று வரை நீர் வரவில்லையெனச் சுட்டிக்காட்டிய சிவநேசன், இன்று எந்தவொரு தமிழ் மகனின் நிலத்திலும், மகாவலி நீரைப் பயன்படுத்தி எந்தத் தொழிலும் செய்யப்படவில்லையென்றும் ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் மகாவலி வலயம் இருக்கின்றதென்றும் தெரிவித்தார்.

விவசாய விசேட ஊக்குவிப்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு, ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில், நேற்று  (23) நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .