2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று 30) முற்பகல் 10.30 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும்”, “சுமந்திரன், ஸ்ரீதரனை எதிர்க்கின்றோம்”, “வடக்கு – கிழக்கில், தமிழருக்கு எதிராக நடத்தப்படும் இராணுவக் கெடுபிடிகளை உடன் நிறுத்து”,  “இலங்கையில், போர்க் குற்றம் செய்தவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்”, “எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்”,  “வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே?”,  “சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .