2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’சர்வதேச விசாரணை நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பயணிப்போம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

சர்வதேச விசாரணை நீதியை நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்து பயணிப்போமென, ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடர் ஏற்றி தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நீதி கோருகின்ற நீதிக்கான பயணம் தொடரும் என்ற பக்கத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து செய்தியைச் சொல்லி நிக்கின்றாரென்றார்.

இப்பொழுது புதிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவைகூட ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு தமிழ் மக்கள் ஆழாகக் கூடியவகையில்  ஓர் இனவாத போக்கில் அமைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் பின்னர் படையினரின் ஆதிக்கம் பல பக்கங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

“எனவே, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நீதி கேட்பது மட்டுமல்ல கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் இருந்து எங்கள் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற கேள்விக்குறியும் தங்களுக்கு இருக்கின்றது.

“தமிழர்களாக இன்று நாடாளுமன்றம் நோக்கி பயணித்திருக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்கும் தாங்கள் தமிழர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் மக்களின் இருப்பையும் தமிழர்களின் இருப்பையும்  தக்கவைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையையும் நீதியையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் பயணிப்போம்” என்றும், அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .