2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சிங்களவர்களுக்கு வழங்கத் துடிக்கும் அதிகாரிகள்’

Editorial   / 2019 மே 15 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – கொக்குளாய், முகத்துவாரம் பகுதியில், தமிழ் மக்களுக்குச் சொந்தமானக் காணியை, சிங்கள மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற துடிப்புடன், அதிகாரிகள் செயற்படுவதாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், முகத்துவாரத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி வழங்குவதாக, மாவட்டச் செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள், தமிழ் மக்களுக்குச் சொந்தமானதெனவும் தெரிவித்தார்.

இப்படியான நிலையில், சிங்கள மக்கள் தனியாக வந்து குடியேறி, வாழ்ந்து வந்ததாகக் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், இன்று, அந்தக் காணியில், 03 ஏக்கர் காணிகள், அரச காணியென அறிவித்தல் விடுக்கப்பட்டு, அந்தக் காணியை, சிங்கள மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஒரு தனியார் காணியில், எப்படி 3 ஏக்கர் மட்டும் அரச காணியாக வரமுடியும் என்று கேள்வியெழுப்பிய அவர், தமிழ் மக்களின் பூர்வீகக் காணியில், உரிமைக் கோராமல் இருந்தவர்களின் 03 ஏக்கர் காணியை, தற்போது அரச காணியென்று கூறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறு அரச காணியென்று கூறிக்கொண்டு, தமிழர்களின் காணியை அபகரிக்கும் முயற்சியில், அரச அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .