2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிறுத்தை படுகொலை: கைதான இருவருக்கும் 29 வரை விளக்கமறியல்

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படு​கொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த இருவரையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

23ஆம் திகதி சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்கள் அம்பாள்குளம் மற்றும் உதயநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.

அவ்விருவரும், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாள்குளத்தைச் சேர்ந்த மோகன் என்றழைக்கப்படும் நடராசா மோகன் (வயது 42) மற்றும் உதயநகரைச் சேர்ந்த நடராஜா சுகுமால் ஆகிய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, நீதவான் உத்தரவின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுத்தையைப் படுகொலைச் செய்த சம்பவம் தொடர்பில், ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக, மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கிராமங்களிலும், ஆகக் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேர், இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில், பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தேகநபர்கள் இருவரும், சிறுத்தையின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட, புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்ட காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் பொலிஸாரால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்​தேகநபர்களை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.  நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார், சந்தேகநபர்களில் இருவரை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையான காலப்பகுதியில், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை அந்தச் சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X