2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிவகரன், பிறேம்குமாரிடம் TID விசாரணை

Editorial   / 2020 மே 22 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

2019ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதியன்று, மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான் ஆகிய பகுதிகளில் உள்ள 2 மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினத்தை நினைவுகூரியமை தொடர்பாக, மன்னாரில் உள்ள 2 முக்கியஸ்தர்களிடம், கொழும்பு பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், நேற்று முன்தினம் (20), விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவின் முக்கியஸ்தரான ஞா.பிறேம் குமார் ஆகியோரிடமே, நேற்று முன்தினம் (20) மன்னாரில் வைத்து, கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், சுமார் இரண்டு மணிநேரம் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணையின்போது, தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய நிகழ்வை தொடர்ச்சியாக, அரசாங்கத்துக்கு எதிராக நடத்தி வருகின்றமை தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இந்த விடயம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனிவரும் நாள்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், உடனடியாகக் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .