2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சீர்கேடுகளைத் தடுப்பதற்கே பூங்கா அமைக்கப்படுகின்றது’

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில், அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கலாசார சீர்கேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே, மன்னார் நகர சபையால், குறித்த பகுதியில் சுற்றுலா பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, மன்னார் நகர சபைத் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், இன்று (14) தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், குறித்த பகுதியில், பற்றைகள் காணப்படுவதன் காரணமாக, அங்கு சமூகவிரோத, கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக, சமூக ஆர்வளர்களால் தனது கவனத்துக்குக் வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது, அங்கு சமூகவிரோதச் செயற்பாடுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்த அவர், குறித்த ஆதாரங்களின் அடிப்படையில், மன்னார் நகர சபையின் பணியாளர்களைக் கொண்டு, குறித்த பகுதியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், குறித்த பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்காக மன்னார் நகர சபைக்கு 83 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில், பல்வேறு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாகவும் கூறினார்.

அந்த நேரத்தில் மௌனமாக இருந்தவர்கள், தற்போது நிதி கிடைக்கப்பெற்றவுடன், பூங்காவை அமைக்கும் பணிகளைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குறித்த இடம் சார்ந்த கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள், மன்னார் நகர சபை பிரிவைச் சேர்ந்தவர்களெனவும் மன்னார் நகர பகுதியின் ஓர் எல்லையை, பிரதேச சபைக்குச் சொந்தமானதெனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .