2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஜனாதிபதியின் உத்தரவை மீறி வழக்குகள் மாற்றப்படுகின்றன’

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் உத்தரவை மீறியே அரசியல் கைதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசாவின் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூன்று அரசியல் கைதிகள் ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அநுராதபுரத்துக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரியே அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நான் கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். கடிதத்தின் பிரகாரம, ஜனாதிபதியின் செயலளார் நீதி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடித்தில், வவுனியா நீதிமன்ற வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் இவ் வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .