2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டோஸ்மாஸ் கழகத்தின் செயற்பாடு வன்னிக்கும் வருகிறது

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

போரால் பாதிக்கப்பட்ட வன்னி பகுதிகளுக்கும் டோஸ்மாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக, 82ஆவது டோஸ்மாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜந்த ஜெயவர்தன தெரிவித்தார்.

இந்த டோஸ்மா நிறுவனம் ஊடாக, மாணவர்களின் கற்றல் மற்றும் அவர்களின் பேச்சாற்றல் நடவடிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் இதன் மூலம் சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற கழகத்தின் செயற்பாடுகளும் அவற்றின் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“டோஸ்மாஸ் இயக்கமானது, பேச்சு ஆற்றலுக்கும் தொடர்பாடலுக்கும் தலைமைத்துவதற்குமான அமைப்பாகும். இது 94 வருடங்கள் பழமை வாய்ந்த அமைப்பாகும். இலங்கையில், 30 கழகங்களைக் கொண்ட 126 அமைப்புகள் இயங்கி வருகின்றன்றன. தற்போது வடமாகாணத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இவற்றை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்கும், யாழ்ப்பாணம் டோஸ்மாஸ் கழகத்தையும், வடமராட்சி டோஸ்மாஸ் கழகத்தையும் மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

“தலைமத்துவ வளர்ச்சி பேச்சாற்றல் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த தனிமனித முன்னேற்றம் ஊடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எமது தலைத்துவ பயிற்சி ஊடாக ஒரு தலைவனை உருவாக்க முடியும் என்பது டோஸ்மாஸ் நிறுவனத்தின் முக்கிய கருதுகோள்.

“அதேபோல், எமது கழகத்தை எதிர்வரும் காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட வன்னி பகுதிகளுக்கும் டோஸ்மாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவுள்ளது.

“யாழ். மாவட்டதில், இந்தச் செயற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்ட பின்னர், வன்னி பகுதிகளிலும் கழகத்தின் செயற்பாடும் பணியும் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .