2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென் பகுதி லொறிகளை உயிலங்குளத்துடன் மட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தென் பகுதியில் இருந்து பொருள்களுடன் மன்னாருக்கு வருகின்ற லொறிகளை, மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம், 9ஆம் கட்டை பகுதியுடன் கட்டுப்படுத்துவதென, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் அவசர நிலைமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடலொன்று, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (3) முற்பகல் 10.30 மணியளவில், மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதாவது, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  உரிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைவாக, வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாருக்கு அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு வருபவர்களை நேரடியாக மன்னாருக்குள் நுழைய அனுமதிக்காது, மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, தென் பகுதியில் இருந்து பொருள்களுடன் மன்னாருக்கு வருகின்ற லொறிகள், உயிலங்குளம் - 9ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி, பின்னர் குறித்த லொறி கிருமி நீக்கம் செய்யப்பட்டப் பின்னர், மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்படும். அந்த லொறிகள், பிரிதொரு சாரதியின் உதவியுடன் மன்னாருக்குள் கொண்டு வரப்பட்டு, பொருள்களை வியாபார நிலையங்களுக்கு வழங்குவதென, தீர்மானிக்கப்பட்டது.

குறித்த செயற்பாடு, பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாளை (4)   முதல் எதிர்வரும் இரண்டு வராங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X