2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’தமிழரசு கட்சியின் தீர்மானம் கண்துடைப்புக்கானது’

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, இலங்கை மீறினாலும் அதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற தமிழரசு கட்சியின் தீர்மானமானது, வெறும் கண்துடைப்புக்கானதென, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சியில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம், தமது பிள்ளைகள் தொடர்பான நீதியை பெற்று தராதெனவும் ஓ.எம்.பி அலுவலகத்தை நிறுவி, அதன் ஊடாக சில உதவிகளை வழங்கி, தம்மை ஏமாற்ற நினைப்பதாகவும் சாடினார்.

ஆனால், தாம் சர்வதேசத்தையே நம்பி நிற்பதாகத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, கால நீடிப்பைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மனித உரிமைகள் பேரவைக்குச் செல்வது வெறும் கண்துடைப்புக்காகவே அன்றி, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதற்காக அல்லவெனவும், அவர் கூறினார்.

அதேபோல், தமிழரசு கட்சியால், ஐ.நா தீர்மானம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கண்துடைப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டனவெனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவ்வாறு பயணிக்க முடியாத சந்தர்ப்பத்தில், எழுத்துமூலமான அறிக்கையைச் சமர்ப்பிப்பதாகவும்,  பத்மநாதன் கருணாவதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X