2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தரிசு நிலங்களாக மாறக்கூடாது’

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பயிர்ச்செய்கை நிலங்களை, தரிசு நிலங்களாக மாற்றாமல், முழுமையான பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துமாறு, முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளங்களுக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டங்கள் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் தான் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் இத்தகவலை விவசாயிகளிடம் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி, விவசாயிகளின் கைகளிலேயே தங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், விவசாயிகள் பயிர்ச் செய்கைகளில் சிறப்பாக ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

முக்கியமான குளங்களுக்கு கீழ் உள்ள பல பயிர்ச் செய்கை நிலங்கள் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாது நிலங்கள் தரிசு நிலங்களாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், மாவட்டத்தில் உள்ள பயிர்ச் செய்கை நிலங்கள், பயிர்ச்செய்கை மேற்கொள்ளாது, தரிசு நிலங்களாக மாறக் கூடாதெனவும் கூறினார்.

அவ்வாறான நிலங்களில், சட்டங்களை மதித்து விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டுமெனவும் அதற்கான ஒத்துழைப்புகளை அதிகாரிகள் வழங்குவார்களெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X