2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் மக்கள் பாதிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த காலத்தில் காட்டாட்சி நடத்தியவர்களால் திட்டமிடப்படாத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் பெண் நோயியல் வைத்தியசாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) மாலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு பெண் நோயியல் வைத்தியசாலை உரிய முறையில் அமைக்கப்பட வேண்டும். இதனைக் குழப்புவதுக்கு பல தீய சக்திகள் முனைப்புக்காட்டுகின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானித்தவர்கள், காட்டாட்சியை நடத்தியவர்கள் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொண்ட அபிவிருத்திகள் மக்களுக்கு பயன்படாத விதத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக, கிளிநொச்சி அம்பாள்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையம், கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச மைதானம், என்பன நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இதேளை பெருந்தொகை நிதிகளை பயன்படுத்தி புனரமைக்கப்பட்ட ஜெயநதிநகர், உருத்திநபுரம் வீதி மற்றும் பலங்கள் என்பன சேதமடைந்துள்ளன. மக்கள் பயன்படுத்த முடியாது காணப்படுகின்றது. இவ்வாறல்லாது, நீண்டகால நோக்கோடு உரிய முறையில் மாவட்டத்தின் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .