2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீர்மானிக்கப்பட்ட அளவுகளில் பயிர்ச்செய்கை முன்னெடுப்பு

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சிறுபோக பயிர்ச் செய்கைக் கூட்டங்களின் போது தீர்மானிக்கப்பட்ட நிலஅளவுகளின் படி, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ், விவசாயிகள் சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, அக்கராயன்குளத்தின் கீழ் - 2,790 ஏக்கரிலும், கரியாலை நாகபடுவான்குளத்தின் கீழ் – 500 ஏக்கரிலும், குடமுருட்டிக்குளத்தின் கீழ் - 322 ஏக்கரிலும், புதுமுறிப்புக்குளத்தின் கீழ் - 850 ஏக்கரிலும், வன்னேரக்குளத்தின் கீழ் - 121 ஏக்கரிலும், இரணைமடுக்குளத்தின் கீழ் - 15 ஆயிரம் ஏக்கரிலும், கனகாம்பிகைக்குளத்தின் கீழ் - 220 ஏக்கரிலும், பிரமந்தனாறுக்குளத்தின் கீழ் 450 ஏக்கரிலும் சிறுபோக பயிர்ச்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .