2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தென்னியங்குளமே நீர் மட்டத்தைத் தீர்மானிக்கும்’

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் குளத்தின் நீர் மட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக, முல்லைத்தீவின் தென்னியங்குளம் உள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், முக்கிய குளங்களில் ஒன்றாக தென்னியங்குளம் காணப்படுவதாகவும், இக்குளம் அபிவிருத்திச் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளாகிய தங்களுடைய கருத்துகளைக் கவனத்தில் எடுத்து, எதிர்காலத்தில், குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் தென்னியங்குளத்தையும் முதன்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், தென்னியங்குளம் நிரம்பி, அதன் மிகுதி நீர் கிளிநொச்சி கரியாலைநாகபடுவான்குளத்தைச் சென்றடைவதாகவும், அந்தவகையில், கரியாலைநாகபடுவான்குளத்தின் நீர் மட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக தென்னியங்குளம் உள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .