2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தேரர்களின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

பெளத்த தேரர்களின் பயமுறுத்தல்களுக்கு எல்லாம் தன்னுடைய இனம் கடைசிமட்டும் அஞ்சப்போவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  தேரர்களின் இந்தப் பயமுறுத்தல்களுக்கு எல்லாம் தன்னுடைய இனம் கடைசிமட்டும் அஞ்சப்போவதில்லையெனவும் தேர்தலில் தன்னுடைய இனத்தின் வாக்குகள் எப்படி இருக்கும் என்று கண்டிப்பாக காட்டும் என்றும் கூறினார். 

“இன்று சமஸ்டி முறையிலான தீர்வைதான் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சொல்லி நிக்கின்றது. இன்று அதனை பிரதமர் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

“பிரபாகரன் கேட்டதைத்தான் கூட்டமைப்பு கேட்கின்றது. பேனாமுனையில் தீர்வைக் கொடுக்கமாட்டோம் என்று சொல்கின்றார்கள். சமஷ்டிமுறை என்றால் தெற்கில் உள்ளவர்கள் எதிராக பார்க்கும் விடயம் ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் எதிராக பார்க்கும் விடயம்” எனவும், அவர் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில், என்னுடைய இனம் வேறு ஒருவரிடம் கையேந்த அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், அதற்கான திட்டங்களை தாங்கள் வரையறுத்துள்ளதாகவும் இந்தியாவிடம் தங்களுடைய இந்தத் திட்டங்களைக் கொண்டு, தங்கள் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோமெனவும் கூறினார்.

“கரையோர பகுதிகளில் பாதுகாப்பை இன்றும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.  எங்கள் கரையோர தமிழ் மக்கள் என்பதை இந்தியா உணர வேண்டும். கரையோரப் பகுதி எங்கள் தமிழ் மக்கள்தான் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றார்கள். 

“இந்தியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது. எங்கள் கரையோர பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களைத் தூக்கி நிறுத்துகின்ற பொறுப்பு இருக்கின்றது” என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .