2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேவன்பிட்டியில் மினி சூறாவளி

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்தில், நேற்று  (20) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, குறித்த கிராமத்தில் உள்ள 13 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

மேலும், குறித்த மினிசூறாவளியில் சிக்குண்டு, தூக்கி வீசப்பட்ட குறித்தக் கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சிறிய கடை ஒன்றும் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

13 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், சேதமடைந்த வீடுகள் சீர்செய்யப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, குறித்த கிராம மக்களின் பாதிப்புகள் குறித்து, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் நேரடியாகச் சென்றுப் பார்வையிட்டதோடு,மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X