2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நடவடிக்கை எடுக்காத சுகாதாரப் பரிசோதகர்கள்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாக, கனகபுரம் வீதியிலுள்ள சிறிய தேநீர் கடையொன்றின் கழிவு நீர் செல்லும் திறந்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேநீர் கடையில் இருந்து வெளியேறுகின்ற அனைத்து கழிவு நீரும் திறந்த குழியில் விடப்படுகிறது. இதனால் குறித்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது, சுற்றயல் பிரதேசங்களின் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறு காரணங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரிகள் ஏன் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .