2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நல்லாட்சி அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது’

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 01 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தெற்கு மக்களின் பொருளாதாரர பிரச்சனையையோ, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனையினையோ தீர்க்கமுடியாது பாரிய தோல்வி அடைந்துள்ளது, நல்லாட்சி அரசு” என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்றுடன் (01) ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில், மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கேப்பாபுலவு மக்களின் காணிப்பிரச்சனை ஆண்டு ஒன்றினை கடந்துள்ள நிலையில், சிறியளவு வெற்றி பெற்றிருப்பது வரவேற்க தக்க விடயம். இருந்தாலும் இந்த பகுதியில் வாழ்கின்ற அனைத்து மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இது அவர்களின் வாழ்வாதார பிரச்சனையாகவும் உள்ளது.

இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை, தெற்கில் உள்ள மக்களின் பொருளாதார பிரச்சனையும் தீர்ந்ததாக இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனையையும் தீர்க்க முடியாமல் பாரிய ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

புனர்வாழ்வு அமைச்சினால் வடமாகாணத்துக்கு என்று  ஒதுக்கப்பட்ட நிதியை படையினருக்கு கொடுத்து விட்டு, எங்கள் மக்களின் காணிகளை விலைக்கு வாங்கி விடுவிப்பது என்பது மிகவும் ஒரு தவறான கருத்து. இது இந்த மக்களின் வாழ்வாதார பிரச்சனை. எனவே காணிகள் விடுவிக்கப்படவேண்டும்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .