2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவோம்’

Editorial   / 2020 மே 22 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

எவ்வாறான நிலை வந்தாலும், தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுப்போமெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், இதற்கு எதிராக வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவுள்ளதாகவும் சட்ட ரீதியாக அவர்கள் அணுகினாலும் கூட தாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவகத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015 - 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில், மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கொழும்பில் இருந்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர், புதன்கிழமை (20) வந்தனரெனத் தெரிவித்தார்.

தான் மட்டும் அல்லாமல்; தனது குழுவில் உள்ள சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், கடந்த மாவீரர் தினம் முடிவடைந்து, சுமார் 7 மாதங்களைக் கடக்கின்றதெனவும் இப்போது இதைப் பற்றி விசாரிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறதெனவும் வினவினார்.

“இன்றைய சூழ்நிலையில், தெற்கில், பௌத்த தேசியவாத சிங்கள வாக்குகளை அரசாங்கம் தன்னகர்த்திக் கொள்ளும் ஒரு போக்குக்காக, வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீதும் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய ஏதுவான நிலையொன்று எதிர்வரும் காலங்களில், வடக்கு - கிழக்கு எங்கும் நிகழலாம் என நாங்கள் ஊகிக்கின்றோம்” எனவும், சிவகரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .