2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நிதானமாகவும் அவதானமாகவும் செயற்படுகின்றோம்’

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“தேசியக் கட்சியைப் பொறுத்தவரை மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் செயற்படுகின்றோம்” என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளுராட்சி சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக ரீதியான கட்சி. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதிலும் எங்களோடு இணங்கிப் போக கூடியவர்களின் ஆதரவைப் பெறுவதுக்கான வழிகளைச் செய்து வருகின்றோம். யாருடன் நாங்கள் இணைய வேண்டும், யாருடன் நாங்கள் இணைய முடியாது என்பது பேச்சுவார்த்தையினூடாக தெரியப்படுத்தப்படும்.

விஜயகலா மகேஸ்வரனின் அறிவிப்பானது, ஐக்கிய தேசிய கட்சியின் முடிவு அல்ல. தேசியக் கட்சியைப் பொறுத்த வரை மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் இருக்கின்றோம். இப்போது இருக்கின்ற அரசாங்கத்துக்கு, நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில், அவர்கள் ஆதரவாக இருப்பார்களானால் அதை பற்றி உரிய நேரத்தில் பேசலாம்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .