2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’நிதி கிடைத்தவுடன் புனரமைக்க முடியும்’

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சி - உமையாள்புரம் இராசாயனக் குளத்தினுடைய புனரமைப்பு வேலைகளுக்குரிய நிதியை இவ்வாண்டு கோரியுள்ள நிலையில், அந்நிதி கிடைக்கும் பட்சத்தில், அதனைப் புனரமைக்க முடியும்” என, மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி -  கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உமையாள்புரம் பகுதியில் 1,200 ஏக்கர் வரையான நிலப்பிரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குளமாகக்  காணப்படும் பரந்தன் இராசாயனக்குளம், இரண்டு தடவைகள் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அந்தக் குளத்தினுடைய நீர் விநியோகம் மேற்கொள்ளும் துருசுப்பகுதி புனரமைக்கப்படவில்லை. இதனால் இதன் கீழ் உள்ள விவசாயிகள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டும் 2016ஆம் ஆண்டும் குளம் பனரமைக்கப்பட்டது. ஆனால், அது உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை. அப்போது ஒதுக்கப்பட்ட நிதி கடந்த கால ஆட்சியிலிருந்த அரசியல் செல்வாக்குடன் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதே தவிர, அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கபபடவில்லை.

இந்நிலையில், இக்குளத்தினுடைய புனரமைப்புப் பணிகள் தொடர்பில் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மீள்குடியேற்றத்தின் பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டு என்றிப் திட்டத்தின் கீழ், குறித்த குளம் நீரப்பாசனத் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டிலே 4.123 மில்லியன் ரூபாய் நிதி கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் கிடைக்கப்பெற்று ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு 3.04 மில்லியன் ரூபாய்க்கான வேலைகள் நடைபெற்று 3.04 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மீதமாக உள்ள நிதி திரும்பியுள்ளது.

“இந்த ஆண்டிலே, குளத்தினுடைய துருசுப்பகுதியை புனரமைப்பதற்கும் ஏனைய சிறிய வேலையை முன்னெடுப்பதற்கும் நிதியைக் கோரியுள்ளோம். அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில், அந்த வேலைகளை முன்னெடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .