2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிர்வாகத்தின் அசமந்தப்போக்கால் பாதிக்கப்படும் உறவினர்கள்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் இறப்பவர்களின் உடலங்கள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொண்டு, அவை மீளவும் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தப்போக்குக் காரணமாக உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களது உடலங்கள், காலம் கடத்தப்பட்டே கையளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 கடந்த இரண்டு தினங்களுக்குள் இவ்வாறு உயிரிழந்த நான்கு உடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக, உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உறவினர்களுக்கு உதவ வேண்டிய வைத்தியசாலை நிர்வாகம், எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ராகுலனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அதற்குப் பதிலளித்த அவர்,  உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர்,  சடலங்களை உறவினர்களிடம் கையளிப்பதில், வைத்தியசாலை பக்கத்தில் எவ்வித தாமதமும் ஏற்படுவதில்லையெனவும் மாறாக பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற தாமதமே, இதற்குக் காரணமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .