2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நீதி கிடைக்க வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என். நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

 நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

211ஆவது நாளாக, இன்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து ஜேர்மனிய  சட்டத்தரணியிடமே அவா்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனா்.

அவா்கள் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தின் போதும் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் எங்களுடை உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனா் இவா்களில் பலா் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனா். எனவே எமக்கு எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும்   அந்த நீதியானது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே சாத்தியமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான அலுவலகம் ஏதனையும் செய்யாது எனவும் நாட்டின் ஜனாதிபதியால் நேரடியாக யாழ்ப்பாணத்தில் வைத்து எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே நாட்டின் ஜனாதிபதியின் உறுதிமொழியே நிறைவேற்றப்படாத நிலையில், அலுவலகமொன்றினால் எதனை மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினா்.

 மேலும் தங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரைக்கும் நாம் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை” எனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .