2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பொலிஸார் குவிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் கொழும்பு, மகரகமை வைத்தியசாலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

மறைந்த தேரரின் சடலத்தை, முல்லைத்தீவு நீராவியடிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் சனிக்கிழமை (21) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தேரரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியில் அடக்கம் செய்வது, இந்து மதத்தை அவமதிக்கும் செயலென, பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த முறைப்பாடு தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸார், சனிக்கிழமை இரவு,  முல்லைத்தீவு மேலதிக நீதவானின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

இதையடுத்து, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கு, இடைக்காலத் தடைவிதித்த பதில் நீதவான், இன்று (23) இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென்றும், சடலத்தை அங்கு கொண்டுசென்று, அஞ்சலி செலுத்துவதைத் தடை செய்ய முடியாதென்றும் தீர்ப்பளித்தார். 

இதேவேளை, இந்த விடயம் குறித்து அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, தேரரின் பூதவுடலை, கோவில் வளாகத்தில் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டாம்” என, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்திருந்தார். 

இந்த நிலையில், நீராவியடி குருகந்த ராஜமஹா விகாரையில், தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் சிலர் தற்போது முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு சென்றுள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீர்ப்பு வழங்குவது 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .