2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுண்நிதிக்கடன் செயற்பாட்டைக் கண்டித்து பேரணி

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜூன் 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் நுண்நிதிக்கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் நுண்கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்;கியிருக்கும் மக்களை விடுவிக்கும் வகையில் அரசாங்கத்துக்கும் மத்திய வங்கிக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்புப்பேரணி ஒன்று இன்று (14) கிளிநொச்சியில் முன்னெடுக்;கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் கிளிநொச்சி அரச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த இப்பேரணி இன்று (14) கிளிநொச்சி கரடிப்போக்குச்சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்டச்செயலகம் வரை சென்றடைந்;துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நுண்;நிதிச்செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளதுடன், உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் இச்செயற்பாட்டைக்கண்டித்து போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X