2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் கடும் கட்டுப்பாடு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  இரவில் இயங்கும் உணவகங்கள்,  விடுதிகள் என்பன மறு அறிவித்தல் வரை இயங்க முடியாதென, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வியாபார நிலையாங்கள், பொது சந்தைகள் ஆகியவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணத் தவறும் வியாபாரிகளின் வியாபார அனுமதி இரத்தாக்கப்படுமென்றார்.

 

அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட   இரவில் இயங்கும் உணவகங்கள்  மற்றும் விடுதிகள் என்பன மறு அறிவித்தல் வரை இயங்க முடியாதெனவும், ஏனைய  உணவகங்கள், தேநீர்சாலைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு முன்னர் மூடப்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.

மேலும், பிரதேச சபை எல்லைக்குட்பட்ட   நடமாடும் வியாபாரங்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,  வியாபாரிகள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் குறைந்தது 15 நாள்களுக்கு ஒரு தடவையாவது, பிசிஆர் பரிசோதனை கட்டாயாம் மேற்கொள்ள வேண்டுமமெனவும் அறிவுறுத்தினார்.

இதேவேளை, பொது நிகழ்வுகள் தமது அனுமதியின்றி நடத்தப்பட்டால், பொது சுகாதார பாதுகாப்பு சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், தவிசாளர் எச்சரிக்கை விடுத்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .