2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் 3,937 குடும்பங்கள் மீள்குடியமர்வு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் 3,937 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதுடன் 233 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜெயராணி பரமோதயன்,

“பச்சிலைப்பள்ளியில் உள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,937 குடும்பங்களைச் சேர்ந்த 12,706 பேர் மீள்குடியேறியிருக்கின்றனர். கண்ணிவெடி அகற்றப்படாமைடால்ல் பல குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை.

இத்தாவில் கிராம அலுவலர் பிரிவில் எட்டுக் குடும்பங்களும்  முகமாலை கிராம அலுவலர் பிரிவில் 86 குடும்பங்களும் வேம்பொடுகேணி கிராம அலுவலர் பிரிவில் 139 குடும்பங்களும் என 233 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்காக விண்ணப்பித்துள்ளன.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட முகமாலை, வேம்பொடுகேணிப்பகுதிகளில் குறைந்தளவான குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கு பதிவுகளை மேற்கொண்ட போதும், நிலங்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து 78 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .