2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனிக்கன்குளம் அரச வீட்டுத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனிக்கன்குளம் அரச வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை குடியமர்த்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என  பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 2012ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அரச அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் இதுவரை அரச அதிகாரிகள் குடியேறாத காரணத்தால் குறித்த பகுதியில் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இங்கு இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு பனிக்கன்குளத்தில் நிரந்தரமாக வாழும் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். உரியவர்கள் குடியேறாததன் விளைவால் பலரும் துன்பப்படவேண்டியுள்ளதாக தெரிவித்து, இங்கு மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை (12) ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது, இது தொடர்பாக, உரிய அதிகாரிகள், வீட்டுத்திட்ட உரிமையாளர்கள் அனனவருடனும் கலந்துரையாடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் குறித்த பிரச்சினை தொடர்பாக முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .