2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைகள் நடாத்தப்படும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 01 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைகள் எதிர்காலத்தில் நடத்தப்படும்” என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 31 வரையான பாடசாலை மாணவர்கள், கால்நடையாக தினமும் முள்ளியவளை றோ.க.தமிழ் வித்தியாலயம், வித்தியானந்தாக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம், தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு கால்நடையாகச் சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இவர்களுக்கான பஸ் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் கோரிக்கைக் கடிதம் ஒன்றை ஒருங்கிணைப்புக்குழுவிடம்  சமர்ப்பித்திருந்தார்.

இதுதொடர்பில் இலங்கைப் போக்குவரத்துச்சபையின் முல்லைத்தீவு சாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,  “பாடசாலை சேவைகளை நடாத்துமாறு ஜனாதிபதி செயலத்தால் பணிப்புரை விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பாடசாலைச் சேவைகள் இனிவரும் நாட்களில் இடம்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .