2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’பாடசாலைகளை திறக்கவும்’

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் இயக்குமாறு கிராமங்களின் பொது அமைப்புகளினாலும் பெற்றோர்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள 112 பாடசாலைகளில் 104 பாடசாலைகளே இயங்குகின்றன. 08 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்தகாலப் போரினாலும் இடப்பெயர்வுகளினாலும் இப்பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பூநகரியில் செட்டியகுறிச்சி அ.த.க பாடசாலை, கௌதாரிமுனை அ.த.க பாடசாலை, பொன்னாவெளி சைவப்பிரகாச வித்தியாலயம்,பல்லவராயன்கட்டு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, தம்பிராய் அ.க. பாடசாலை, அத்தாய் முத்துக்குமாரசுவாமி வித்தியாலயம், கரைச்சிக் கோட்டத்தில் சிங்கள மகா வித்தியாலயம், குஞ்சுக்குளம் பாடசாலை ஆகிய எட்டுப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இப்பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ஆட்சிக் காலத்திலும் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் இப்பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும் பாடசாலைகள் திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக, கிராமங்களில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள், தமது பிள்ளைகளை நீண்ட தூரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விக்காக அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .