2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாரதிபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா – பாரதிபுரத்தில், 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது இவ்வீட்டுத்திட்டங்களுக்கான நிதியானது சீரான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்துக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம்  இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்துக்கான அடுத்த கட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படாமையால் எமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளோம்.

மேலும் 2018ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டட பொருள்களின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளமையால் குறித்த ஐந்து இலட்சம் ரூபாயில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், நாம் தற்போது மேலும் கடனாளியாகியுள்ளோம் என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .