2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிலக்குடியிருப்பில் இருந்த படை முகாம்கள் அகற்றப்பட்டன

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு பகுதியில், விமானப்படையினர் வசமிருந்த காணிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.

பிலக்குடியிருப்பு பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணி மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் என்பன, விமானப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்ற நிலையில், அவற்றில் பொதுமக்களுக்குச் சொந்தமான 42.7 ஏக்கர் காணிகள், கடந்த பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டு, 82 வரையான குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன.

இந்நிலையில், மேலும் ஒரு பகுதி காணிகளை, விமானப்படையினர் விடுவித்துள்ளனர். இதற்கமைய, புதுக்குடியிருப்பு - கேப்பாப்புலவு பிரதான வீதிக்கும் நந்திக்கடலுக்கும் இடைப்பட்டப் பகுதியில், விமானப் படையினரின் ஓய்வு விடுதிகள் அமைக்கப்பட்டிருந்த காணிகளும் பிலக்குடியிருப்பு ஆரம்பச் சுகாதார நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த காணிகளுக்கு போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளும், விமானப் படையினரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .