2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பு நகரில் 56 கட்டாக்காலி கால்நடைகள் பிடிப்பு

Niroshini   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில், நேற்று (28) இரவு,  கட்டாக்காலிகளாக நின்ற 56 கால்நடைகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் பிடிக்கப்பட்டன.

 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதிகளில் நிக்கும் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துகள் இடம்பெற்று வருவதுடன், விவசாய செய்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் வீதிகளில் உள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு, பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைமைய, நேற்று (28) 56 மாடுகளை பிரதேச சபையினர் பிடித்துள்ளன​ர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு, கால்நடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் அறவிடப்படும் என்று பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பெரிய மாடு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாயும் கன்று குட்டிக்கு ஆயிரம் ரூபாயும் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன், ஒரு நாள் பராமரிப்புக்காக இருநூறு ரூபாயும் என அறிவிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .