2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தர் சிலையை அகற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு  நீர்ப்பாசன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தக்காலத்தில்  இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நீர்ப்பாசன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தினர் வணங்குவதற்காக​வே குறித்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டதாகவும்,தற்போது குறித்த இடத்தில் இராணுவத்தினர் இல்லாத காரணத்தினால் புத்தர் சிலை இருப்பது பிரயோசனமற்ற ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார்3200 மில்லியன் ரூபா செலவில் இரணைமடு நீர்த்தேக்கம் அபிவிருத்தி மற்றும் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நீர் செல்லும் கதவுகளை விரிவாக்க இந்தப் புத்தர் சிலை தடையாகவுள்ளதாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த புத்தர் சிலையை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .