2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புளியமுனை காணிகளில் கைவைத்த வனவளத் திணைக்களம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, செம்மலை, புளியமுனைப் பகுதியில், மக்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் தோட்டக் காணி வனவளத் திணைக்களத்தால் கடந்த வாரம் அபகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்டுள்ளது.

இதனால் 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

புளியமுனைப் பகுதியில் உள்ள சுமார் 720 ஏக்கர் காணிகள், 1972ஆம் ஆண்டுகளில் செம்மலையில் உள்ள 350 மக்களுக்கு,பயிர்ச் செய்கைக்கென, அப்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.

அன்றிலிருந்து அந்த மக்கள் அந்தக் காணிகளில், உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், போர் இடம்பெற்ற காலத்தில் அங்கு பயிர்ச் செய்ய முடியாமல் போனதால், அந்தக் காணிகளை கைவிட்டுச் சென்றனர்.

எனினும், போரின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக குறித்த காணிகளின் ஒரு பகுதியை துப்புரவு செய்த மக்கள், மீண்டும் உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம் குறித்த பகுதிக்குச் சென்ற வனஇலாகாத் திணைக்களத்தினர், அந்தக் காணிகள் வனவளத்துக்குச் சொந்தமானவை எனத் தெரிவித்து, காணிகளை அடையாளபப்படுத்தி பெயர்ப் பலகை நட்டுள்ளனர்.

குறித்த அறிவுறுத்தலையும் மீறி காணிகளுக்குள் அத்துமீறுவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமமென்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

அக்காணிகள் மக்களுடைய காணிகள் தான் என்று என்னால் கூறமுடியுமெனத் தெரிவித்த அவர், சிறிய பற்றைகள் வளர்ந்தவுடன் அது வனவளம் என்று கூறியே வனவளத்தினர் இக்காணிகளுக்கு எல்லையிட்டுள்ளனரெனவும் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X