2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் சிக்கல்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில், கழிவுகளைக் கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் தவிர்ந்த ஏனைய இடங்களில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கரைச்சி பிரதேச செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“பிரதேச சபையால் கழிவுகளை கொட்டுவதற்கென, உமையாள்புரம் பகுதியில், ஏ-9 வீதியிலிருந்து ரயில் வீதியை, கடந்த இரண்டு கிலோமீற்றர் தொலைவில், 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

“இருந்தபோதும் சிலர், கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டாது வேறு இடங்களில் கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X