2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’போதை பாவனையினால் சமூகம் பின்தங்குகிறது’

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைவஸ்து பாவனையினால் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி ஆகியவற்றிற்கு பெரும் தடையாக உருவெடுத்து காரணியாகவும் அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

போதையற்ற தேசமாக நமது நாட்டினை உருவாக்கும் உயரிய நோக்கினை கொண்டு தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதையற்ற வாரத்திற்கு வடமாகாணத்தின் ஒன்றிணைந்த பங்களிப்பினை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,

பணபலம் படைத்தவர்களின் பாவனை என்பதை தாண்டியும் இன்று வறியவர்களின் வளர்ச்சியினையும் பாதிப்படைய செய்துள்ளது.

நாம் ஒவ்வொரு செங்கல்லாக அடியெடுத்து வைக்கும் சூழலில் யுத்தத்திற்கு பின்னர் கல்வி, அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சியினையும் குந்தகப்படுதியுள்ளது.
எமது முன்னேற்றத்தை நலனாக கொண்டு எமது கிராமம், எமது மாவட்டம், எமது மாகாணத்தினை சகல வழிகளிலும் முன்னேற்றம் அடைய செய்வது அனைவரினதும் ஒன்றிணைந்த பொறுப்புடன் கூடிய கடமை. 

கொள்கைகள், சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். சிகிச்சைகளுடன், பயிற்சி நிலையங்கள் ஊடாக விழிப்புணர்வை வழங்கல். முழுமையாக தடுத்தல் என்ற மூன்று முறைகளின் ஊடாக ஜனாதிபதியால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
ஜனாதிபதியுடனான பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான பயணத்தின் போது போதைவஸ்து பாவனை, போதைவஸ்து கடத்தல் காரணமாக நாடும், மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததோடு அவர்களின் வளர்ச்சியிலும் பெரும் தடை ஏற்பட்டிருந்தது.
எமது நாட்டிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தி ஒழிப்பதன் மூலம் எமது நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என்பதை நாட்டின் தலைவரும் மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

வடமாகாணத்தில் போதைவஸ்தை கட்டுப்படுத்தி துடைத்தெறிந்து எமது இளைஞர்களை சரியான பாதையில் நகர்த்தி செல்வோம். சிறந்த எதிர்காலத்தை பொருளாதார வளர்ச்சியினை ஏற்ப்படுத்தி எமது பிரதேசத்தை கல்வி, பொருளாதாரம், கலாச்சார ரீதியாக மீண்டும் பலம் பெறுவதற்கு உறுதியாக நேரான திசை நோக்கி பயணிப்போம். என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .