2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’மணலைப் பெற்றுத் தரவும்’

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு துணுக்காய் பிரதேச செயலாளர் மணலைப் பெற்றுத் தருமாறு, நிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படும் நிலையில் உள்ளூர் குடும்பங்கள் தமக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு மணலினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

துணுக்காய் பிரதேச செயலகம் வெளியிடங்களுக்கு மணலைக் கொண்டு செல்வதைத் தடை செய்து நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு மணலைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான் உட்பட பல கிராமங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படும் நிலையில் உள்ளூர் மக்கள் தமது வீடுகளை அமைப்பதற்கு மணலினைப் பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடியில் உள்ளதாக துணுக்காய் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X