2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் 170 கிலோ கேரளா கஞ்சா சிக்கியது

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுஷங்க

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான  170 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா தொகையானது, மன்னார்- பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

70 பைகளில் காணப்பட்ட 170 கிலோகிராம் கஞ்சாவை பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத்தினர், மேலதிக விசார​ணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கிளிநொச்சி பொலிஸ் வி​சேட படை முகாமிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .