2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல்,  இன்று (3) மாலை 3 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ. மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்,  கொழும்பிலிருந்து வருகை தந்த உதவித் தேர்தல் ஆணையாளர்  பண்டார பாபா, மன்னார் மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜே.ஜேனிற்றன், உதவி பொலிஸ் அத்தியட்சகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கொரோனா தொற்று பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக மன்னார் மாவட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்பாக  சுய  தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 பேர்கள் தேர்தலில் வாக்களிக்க பிற்பகல் 4 மணிக்கு பிற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தேர்தல்   பாதுகாப்பு கடமையில் சுமார் 700 பொலிஸார் கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணியில் இருந்து மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .