2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனிதப் புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது, மீண்டும் இன்று திங்கட்கிழமை (17) காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்றைய தினம் வரை இடம்பெறவில்லை.

கடந்த புதன்கிழமை (12)  116ஆவது நாளாக இடம்பெற்ற அகழ்வு பணி மற்றும் அளவிடும் பணிகளுக்குப் பின்னர்  அகழ்வுப் பணி  இடம்பெறவில்லை. 

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால் இடம்பெறாதிருந்த அகழ்வு பணியனது இன்று  திங்கட்கிழமை  117ஆவது  நாளாக மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த புதை குழியில் இருந்து  இது வரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்  உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள்  முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் அதிகளவில் இடம்பெற்றன.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .