2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் கொரோனா அச்சுறுத்தல்

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்றாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு, கடந்த வாரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனைகளின் போது, மன்னார் நகர பகுதி மற்றும் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்களின் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார துறையினர் இணைந்து, இதுவரை 15 வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதுடன், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் ஊழியர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அத்தியாவசித் தேவைகள் இன்றி, நகரத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம், நேற்று முன்தினம் (19) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .