2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னாரில் விசேட செயலமர்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும் தனி மனிதனுடைய உரிமைகளையும் அறிந்து கொள்வதன் ஊடாக மத ரீதியான பிரச்சினைகளை சமரசமாக்கும் முகமாக 'மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு' எனும் தொனிப்பொருளில் சட்டத்தின் ஆட்சி தொடர்பான செயலமர்வு, இன்று (13) காலை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் எம்.உவைஸ் தலைமையில்  தொடர்பாடலுக்கான மையம் நிறுவனத்தின் அமைப்பாளர் ஜோன்சன் ஒழுங்கமைப்பில் , இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இதன்போது மாவட்ட ரீதியில் மத நல்லிணக்கம் தொடர்பாக செயலாற்றும் மதகுருக்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், சமூக ஆர்வளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில், இலங்கையின் சட்டத்தின் அடிப்படையில் தனி ஒரு மனிதனுக்கு காணப்படும் சட்ட ரீதியான உரிமைகள் தொடர்பாகவும் மத ரீதியாக காணப்படும் சுதந்திரம் தொடர்பாகவும் சட்டத்தரணி எம்.ஏ.ஹக்கீமால் விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன், நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மேலும், இந்தப் பயிற்சியின் ஊடான நடைமுறை பயன்கள் தொடர்பான பயிற்சிகள் நாளைய தினமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .